Mon panier 0
Mes favoris 0
சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila nerankalil sila manitharkal

சில நேரங்களில் சில மனிதர்கள்
Sila nerankalil sila manitharkal

Editeur(s)
Kalachuvadu
Date de parution : 01/12/2014

Expédié sous 48h
18.50 €

Livraison France à 4,50 € avec Mondial Relay !

Ean : 9789384641016

Partager :

Résumé


சமுதாயத்தில் பெரும் கலாச்சார அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு சிறுகதையை நாவலாக விரித்து எழுதினால் எப்படி இருக்கும்? சிறுகதையின் பாத்திரங்களும் அவர்தம் வாழ்க்கையும் தொடர்ந்து என்னவாக ஆகின்றன என்னும் தேடலின் விளைவாய் உருவான நாவல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. வாழ்வின் சாரத்தை ஒரு சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி சிறுகதை. வாழ்வின் முழுமையைத் தழுவ விழையும் விரிவான தேடல் நாவல். ஒரே நிகழ்வைச் சிறுகதையாகவும் நாவலாகவும் உருவாக்கியிருக்கும் ஜெயகாந்தன் அதன் மூலம் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள புனைவுச் சாத்தியங்களை அற்புதமாக வெளிக்கொணர்கிறார். வன்பாலுறவுக்குப் பலியான ஒரு பெண் சமூகத்தின் குறை மதிப்புக்கு ஆளாவதையும் அவள் அதைச் சுயமரியாதையுடன் கம்பீரமாக எதிர்கொள்வதையும் இந்த நாவலில் ஜெயகாந்தன் சித்திரிக்கிறார். தமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களுள் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அதே சமயம் குற்றம் இழைத்த ஆண் உட்பட இதர பாத்திரங்களையும் முழுமையாக வெளிப்படுத்த ஜெயகாந்தன் தவறவில்லை. சிறுகதையின் கச்சிதத்தன்மையுடன் புனைவுருக் கொண்ட நிகழ்வு நாவலுக்குரிய பன்முக அம்சங்களுடன் பேருருவம் கொள்கிறது. தனிநபர் சார்ந்த உளவியல் சிக்கல்களும் சமூக உறவுகளும் பாலியல் விவகாரங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களையும் நாவல் இயல்பாகப் பதிவுசெய்கிறது. வாழ்வின் சித்தரிப்பினூடே சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகளும் கேள்விக்குள்ளாகின்றன. ஒரு நிகழ்வின் அந்தக் கணத்து அதிர்ச்சி மதிப்பைத் தாண்டி வாழ்வின் முழுமையின் பின்னணியில் அது கொள்ளும் பரிமாணங்களையும் பரிணாமங்களையும் கொண்டிருப்பதே இந்த நாவலின் சிறப்பு.

Quelques mots en français :
Un très beau roman de Jayakanthan. L'histoire d'une fille qui a été violée et qui lutte contre le traitement affreux que lui réserve la société, avec toute sa dignité et sa bravoure. L'histoire montre aussi dans quelle détresse psychologique se retrouvent certaines femmes, ayant vécues des expériences similaires. Avec ce roman, l'auteur montre les horreurs auxquelles font face certaines femmes.